››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

68ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக மத அனுஷ்டான்கள் ஆரம்பம

68ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக மத அனுஷ்டானங்கள் ஆரம்பம்

[2017/09/29]
இலங்கை இராணுவம் அதன் 68ஆவது இராணுவ தினத்தை எதிர்வரும் மாதம் (ஒக்டோபர்) 10 ஆம் திகதி கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு தொடர்ச்சியான சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் பல இடம்பெற உள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் கண்டி தலதா மாளிகையில் இராணுவ ஆசிர்வாத பௌத்த மத நிகழ்வுகள் நேற்று (செப்டேம்பர், 28) இடம்பெற்றுள்ளது. இதன்போது போதி பூஜை, 68 மகா சங்க உறுப்பினர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வு என்பன இடம்பெற்றுள்ளது. மேலும் ஸ்ரீ தலதா மாளிகையின் அபிவிருத்திக்காக நிதியுதவியும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்