››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உலக சிறுவர் தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

உலக சிறுவர் தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/10/02]

இன்று (ஒக்டோபர், 01) பியகம சியம்பெலாபேவத்த கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தினகொண்டாட்ட நிகழ்வுகளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார். இதன்போது, உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “லமா லொவட ருவன் தினக்” எனும் முழு நாள் சிறுவர் தின நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மேலும், இவ்வைபவத்தின் போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் சிறுவர்களின் சிறந்த எதிகால நலனுக்காக பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், அவற்றில் ஒரு பிரிவான கல்விக்காக வருடாந்த வரவுசெலவு திட்ட ஒதுக்கீட்டில் அதிகளவிலான நிதியினை கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இளைய தலைமுறையினரின் கல்வித் தரத்தினை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்ததாக மேம்படுத்தும் நோக்கத்தோடு அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின்போது, அதிகளவான சிறுவர்கள் நிகழ்சிகளில் கலந்துகொண்டார்கள். மேலும், இராஜாங்க அமைச்சரினால் சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்