››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ்பாணத்தில் இராணுவத்தினரால் வீடு நிர்மாணிப்பு

யாழ்பாணத்தில் இராணுவத்தினரால் வீடு நிர்மாணிப்பு

[2017/09/30]

யாழ்ப்பாண பெரியவிளான் பிரதேசத்தில் வரிய குடும்பத்தினருக்கு இலங்கை இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீடு பெரியவிளான் பகுதியை சேர்ந்த ஆரியவதன் கதவியன்பில்லை என்பவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

யாழ் பாதுகாப்பு படை தலைமையாகத்தின் கீழுள்ள 513ஆவது படைபிரிவின் 14 கெமுனு வாட்ச் படைபிரிவினரினால் குறித்த வீட்டின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கான நிதியுதவியினை திரு காஞ்சனா மாரசிங்க அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இடம்பெற்ற சிறு வைபவத்தின்போது, பயனாளிக்கு புதிய வீட்டுக்கான திறப்பினை யாழ் பாதுகாப்பு படை தலைமையாகத்தின் கட்டளைத்தளபதி மேஜெர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராய்ச்சி அவர்களால் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறப்பினர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் முன்னிலையல் வழங்கி வைக்கப்பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்