››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்களின் சங்க மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்களின் சங்க மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/10/04]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் 08 ஆவது மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இன்று (ஒக்டோபர் 04) கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அதிமேதகு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்ததுடன், பிரதமர் கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஆரம்ப உரையும் நிகழ்த்தப்பட்டது. இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு நிகழ்வுடன் இணைந்ததாக கொழும்பில் இம்மாநாடு இடம்பெறுகிறது. மேலும் இந்நிகழ்வின்போது ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் 08 ஆவது மாநாடானது சார்க் உறுப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும்வகையில் இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ. கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர், அமைச்சர்கள், சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அமையம், தென் ஆசியா மக்களின் மத்தியில் நட்பையும் புரிந்துணர்வையும் வளர்த்தல், சார்க் பிராந்திய நாடுகளின் பாராளுமன்றங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூட்டுறவு மற்றும் தகவல் பரிமாற்றம், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் பிராந்தியத்தின் நடைமுறைகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றிற்கான கருத்துக்களத்தினை வழங்குதல் எனும் நோக்கில் 1992ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த அமையத்தின் அங்குரார்ப்பண மாநாடு 1995ஆம் ஆண்டு இந்தியாவிலும் அதனைத்தொடர்ந்து 1997ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும், 1999ஆம் ஆண்டு பங்களாதேஷிலும் 2006ஆம் ஆண்டு இலங்கையிலும், 2011, 2012ஆம் ஆண்டுகளில் முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் 2013ஆம் ஆண்டு மாலைதீவிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்