››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் யாழ் மக்களுக்கு நிவாரணம்

இராணுவத்தினரால் யாழ் மக்களுக்கு நிவாரணம்

[2017/10/04]

யாழ் குடா பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையில் குடிநீர் விநியோக நிவாரணத்திட்டம் ஒன்று இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள படையினரால் யாழ்ப்பாணத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நாவற்குலி மற்றும் கோயில்கண்டி ஆகிய பிரதேச மக்களின் நலன் குறித்து இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் குடா பகுயில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் மக்கள் குடி நீருக்கான தட்டுப்பாட்டினை எதிர்நோக்குகின்றனர். இதனை கருத்திற்கொண்டு படையினர் பல்வேறு இடங்களில் நீர் தாங்கிகளை வைத்து பௌசர்கள் மூலம் தொடர்ச்சியாக குடிநீரினை வழங்கிவருகின்றனர். இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்டுப்பட்டுவரும் இச் சமூக நலன்புரி திட்டத்தின் மூலம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 10,000ற்கு மேற்பட்ட பொதுமக்கள் நன்மையடைந்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் (ஒக்டோபர், 01) இடம்பெற்ற நிகழ்வின் ஒன்றின் போது இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகை பாடசாலை கற்றல் உபகரனங்கள் மற்றும் பத்து துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதனுடன் நிறப்பூச்சு, 10 மின்விசிறிகள், விளையாட்டு உபகரனங்ககள், வாத்திய கருவிகள் உட்பட 5 கணனிகலும் வழங்கிவைக்கப்பட்டன. ரூபா 1.7 மில்லியன் பெறுமதியான இந்நன்கொடை பொருட்கள், கொழும்பு டீ எஸ் சேனநாயக கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், சிரேஷ்ட இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்