››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இராணுவ தினத்தை முன்னிட்டு சர்வமத நிகழ்வுகள்

இலங்கை இராணுவ தினத்தை முன்னிட்டு சர்வமத நிகழ்வுகள்

[2017/10/05]

இம்மாதம் (ஒக்டோபர்) 10ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவம் தொடராக பல் சர்வமத நிகழ்வுகளை மேற்கொண்டுவருவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், அண்மையில் (செப்டம்பர், 28) ஆரம்ப மத நிகழ்வுகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வுடன் ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் பல சர்வமத ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கண்டியில் இடம்பெற்ற பிரதான மதநிகழ்வை தொடர்ந்து இரண்டாவது பிரதான நிகழ்வான கொடி ஆசிர்வாதநிகழ்வு அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் திங்களன்று (ஒக்டோபர், 02) இடம்பெற்றது.

இதேவேளை, இலங்கை இராணுவ இந்து சங்கததினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்து சமய நிகழ்வுகள் கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பல வாநேஷ்வரர் கோவிலில் புதனகிழமை (ஒக்டோபர், 04) இடம்பெற்றதுடன், அதேதினத்தில் இலங்கை இராணுவ இஸ்லாமிய சங்கததினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகள் கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாயலிலும் இடம்பெற்றன. மேலும், இலங்கை இராணுவ கிறிஸ்தவ சங்கததினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டு நிகழ்வுகள் பொரளை புனித கிறிஸ்துவ தேவாலயத்தில் செவ்வாய்கிழமையும் (ஒக்டோபர், 03) இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசீர்வாத மத நிகழ்வுகள் யாவும் உரிய மத குரு மார்களைக்கொண்டு அவரவர் மதங்களின் மரபுகள் மற்றும் மரியாதைகளுகமைய ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின்போது, அதிக எண்ணிகையிலான இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்