››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படையினரால் மேலும் பல குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

இலங்கை கடற்படையினரால் மேலும் பல குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

[2017/10/05]

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் தொடராக அண்மையில் நாட்டின் பலபாகங்களிலும் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் 15 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி, இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை சுங்கத்தினைக்களம் ஆகியனவற்றின் நிதியுதவியுடன், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் குறித்த குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், ரிதிமாலியத்த பிரதேசத்தின் செனவிகம, திக்யாய, குடாலுனுக, கெசெல்பொத வடக்கு, நாகதீப 6 பீ, மொரான ஆகிய கிராமங்களிலும், மதவச்ச்சி பிரதேசத்தின் வல்பொலபகுதியிலும் கலந்மிந்துளுவெவ பிரதேசத்தின் ஒயமடோவ விகாரை மற்றும் கங்காராம ஆகிய பிரதேசங்களிலும் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதன் பிரகாரம் விகாரையில் வசிக்கும் மகாசங்க உறுப்பினர்கள் உட்பட அப்பிரதேசங்களில் உள்ள குடும்பங்களுக்கும் சுத்தமான குடி நீரை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் ஊடாக 1850 க்கும் அதிகமான குடும்பங்கள் சுத்தமான குடிநீரினை பெற்றுக் கொள்ளும் அதேவேளை, அனுராதபுரம் டீ எஸ் சேனநாயக கனிஷ்ட வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைத்தின் ஊடாக அப்பாடசாலையின் 2,347 மாணவர்கள் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்வார்கள். மேலும் புல்மோட்டை, வவுனியா மற்றும் மன்னார் பிராந்திய இராணுவ முகாம்களிலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்தின் ஊடாக, சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் இதுவரை சுமார் 275 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான நிதியுதவியினை சிறுநீரக தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் அரச மற்றும் தனியார் துறையினர் வழங்கியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 123,000 குடுமபங்களும் மற்றும் 90,000 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெறும் வசதியினை பெற்றுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்