››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2017/10/07]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் கொழும்பு டவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “நேதுவம பெரி மினிஹெக்” எனும் பிரபல மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (ஒக்டோபர், 06) கலந்து சிரப்பித்தார்.

இந்நிகழ்விற்கு வருகைதந்த செயலாளர் அவர்களை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் வரவேற்றுள்ளார்.

ராஜித திஸாநாயக்க அவர்கள் இயற்றிய இம்மேடை நாடகம் பார்வையாளர்களுக்காக நேற்று மாலை அரங்கேற்றப்பட்தத்துடன், குறித்த நாடகம் இவ்வருட மேடை நாடக விருது வழங்கும் விழாவின்போது ஏழு விருதுகளை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், விமானப்படை தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மற்றும் அமைச்சின் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்