››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இராணுவம் 68வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

இலங்கை இராணுவம் 68வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

[2017/10/10]

இலங்கை இராணுவம் தனது 68வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர்.10) கொண்டாடுகிறது. "இராணுவ தின" கொண்டாட்ட நிகழ்வுகள் பனாகொடை இராணுவ வளாகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இராணுவத்தின் 68வது ஆண்டு நிறைவையொட்டி சர்வமத நிகழ்வுகள் பல இடம்பெற்றன. இராணுவ கொடிகளுக்கு ஆசீர்வாதம் வாதம் வழங்கும் பிரதான பௌத்த மத நிகவுகள், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலும் பின்னர் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையிலும் இடம்பெற்றது. இந்து சமய நிகழ்வுகள் கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பல வாநேஷ்வரர் கோவிலில் இடம்பெற்ற அதேவேளை இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகள் கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாயலிலும் கிறிஸ்தவ மத வழிபாட்டு நிகழ்வுகள் பொரளை புனித கிறிஸ்துவ தேவாலயத்திலும் இடம்பெற்றன. ஆசீர்வாதம் வழங்கும் மற்றுமொரு நிகழ்வு கதிர்காமம் கிரிவெஹர விகாரையிலும் இடம்பெற்றது. இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட பிரித் ஓதுதல் மற்றும் தானம் வழங்குதல் என்பன பனாகொட ஸ்ரீ போதிராஜ ராமாவில் ஞாயிறன்று (ஒக்டோபர்.08) இடம்பெற்றது.

1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிலோன் இராணுவம் என ஆரம்பமான இராணுவம் 1972ம் ஆண்டு இலங்கை குடியரசான பின் இலங்கை இராணுவம் என பெயர் மாற்றம் பெற்றது. தாய் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதற்காகவும் சமாதானமான யுகத்தை நாட்டினுள் ஏற்படுத்துவதற்காகவும் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவத்தின் சார்பில் பல ஆயிரக்கணக்கான வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

தற்பொழுது 24 படைப்பிரிவுகளை கொண்டுள்ள இலங்கை இராணுவம் யுத்ததின் பின்னர் நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

விஷேடமக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் போன்ற வேலைத்திட்டங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நாட்டில் ஏற்படும் அசாதரன நிலைமைகளின் போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள், தேசிய டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் ஆகிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் சர்வதேச அமைதி காக்கும் படையில் சேவையாற்றுவதற்கும் சந்தரப்பங்கள் பல வழங்கப்பட்டுள்ளன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்