››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

8 ஆவது “கோல் டயலொக்” வெற்றிகரமாக நிறைவு

8 ஆவது “கோல் டயலொக்” வெற்றிகரமாக நிறைவு

[2017/10/11]

பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட எட்டாவது “கோல் டயலொக்” எனும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு நேற்று மாலை (ஒக்டோபர், 10) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவுற்றது.

“'மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வை'” என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், 51 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், தொனிப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டது.

பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் களத்தில் பொதுவான சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் உலகளாவிய மூலோபாயத்தை உருவாக்குதல் என்பன “கோல் டயலொக்” எனும் மாநாட்டினுடைய நோக்கமாக காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இம்மாநாடானது தேசிய மற்றும் சர்வேதேச பங்காளர்கள் கடல்சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கும் வகையிலான ஒரு சிறந்த தளமாக காணப்படுகின்றமை குறிபபிடத்தக்கதாகும்.

தொடர்பான செயதிகள் >>

'மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வை' எனும் தொனிப்பொருளில் கோல் டயலொக் - 2017

“கோல் டயலொக் 2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபரில் ஆரம்பம்...செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்