››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

3ஆவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நாளை ஆரம்பம்

3ஆவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நாளை ஆரம்பம்

[2017/10/11]

 

இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” கொழும்பில் வியாழனன்று (ஒக்டோபர், 12) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களைக்கொண்ட இம் மாநாடு அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வான்பலத்தின் மூலம் சமச்சீரற்ற சவால்களை எதிர்கொள்ளுதல்” எனும் தொனிப்பொருளில் இவ்வருட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக பல்வேறு துறைகளில் தேர்ச்சிபெற்றவர்கள் மற்றும் தொழில்நிபுணர்கள் ஆகியோர்களின் நிபுணத்துவத்தை ஒன்று சேர்ப்பதற்கான தளத்தினை உருவாக்குதல், வான்பலத்தினை பயன்படுத்துவதிநூடாக தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் வான்படையினரை தயார்படுத்துதல் என்பன காணப்படுகிறன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்