››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'மித்ர சக்தி-2017’கூட்டுப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இராணுவ குழு இந்தியா பயணம்

'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவ குழு இந்தியா பயணம்

[2017/10/12]

இலங்கை – இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைத்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி-2017’இல் பங்கேற்பதற்காக இலங்கை இராணுவ குழுவினர் நேற்றைய தினம் (ஒக்டோபர்,11) இந்தியா நோக்கி பயணமானார்கள். இக்குழுவில் இலங்கை இராணுவ சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 10 இராணுவ அதிகாரிகள், மற்றும் 110 படைச்சிப்பாய்கள் ஆகியோர் உள்ளடங்குவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

'மித்ர சக்தி' கூட்டுப் பயிற்சியானது இலங்கை – இந்திய இராணுவத்தினரின் இணைந்து செயலாற்றும் திறன்கள், இராணுவ கூட்டுறவு, அனுபவங்கங்களை பகிர்ந்து கொள்ளல் மற்றும் சர்வதேச இராணுவ பிரச்சினைகளை புரிந்துகொள்ளுதல் என்பவற்றை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வருடாந்த பயிற்சி திட்டமாகும். விசேடமாக கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படை நடவடிக்கையின்போது கூட்டு தந்திரோபாயத்தினை விருத்திசெய்தல் மற்றும் இரு தரப்பினரின் நிபுணத்துவங்களை பகிர்ந்து கொள்ளல் ஆகிய நோக்கிலும் குறித்த பயிற்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் இத்திட்டத்தில் ஆயுத பயிற்சி, அடிப்படை இராணுவ உத்திகள், சிக்கலான போர்கள தந்திரோபாயங்கள் என்பனவும் உள்ளடங்குகின்றது.

2012ஆம் ஆண்டு முதல் இதுவரை ‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சியானது இரு நாடுகளினாலும் தலா இரு முறைகள் வீதம் இடம்பெற்றுள்ளன. இம்முறை ஐந்தாவது கூட்டுப்பயிற்சி இந்தியாவில் இடம்பெறுகிறது. கடந்த வருடம் இந்நிகழ்வு அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவு தலைமையகத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

புனேயில் அமைந்துள்ள ஒந்த் இராணுவ முகாமில் இம்மாதம் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்பயிற்சியில் இலங்கை இராணுவ குழு தமது சக இந்திய இராணுவ குழுவுடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இரு நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ள பயிற்சியின் இறுதி நிகழ்வுகள் இம்மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கை இந்திய 4வது இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி நிறைவுப்பெற்றது



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்