››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நிகழ்வில் பங்கேற்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நிகழ்வில் பங்கேற்பு

[2017/10/12]

இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஒக்டோபர், 12) ஆரம்பமாகியது. இன்று காலை இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். குறித்த இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தலைமை உரையாற்றினார்.

“வான்பலத்தின் மூலம் சமச்சீரற்ற சவால்களை எதிர்கொள்ளுதல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் இந்நிகழ்வின் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.

இவ்வருட வான் ஆய்வரங்கில் 17 நாடுகளைச் சேர்ந்த 24 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். முதல் நாள் நிகழ்வு நான்கு அமர்வுகளைக்கொண்டுள்ளது. இதில் 08 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உரையாளர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர். இவ் ஆய்வரங்கின் இறுதி தினமான நாளை இரு அமர்வுகள் இடம்பெறவுள்ளது. இதில் 04 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உரையாளர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர்

இந்கு உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், பூகோள-அரசியல், மூலோபாயங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் சமகால உலகமானது நிறைய மாற்றம் கண்டுள்ளது எனவும் அச்சுறுத்தலானது நிலம், கடல், வான் வெளி மற்றும் இணைய வெளி ஆகிய அனைத்து பரிமாணங்களிலும் சமச்சீரற்ற தன்மையாக மாறிவிட்டது. தற்காலத்தில் ஒவ்வொரு நாடுகளினதும், தேசிய சக்தியின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக இராணுவ கட்டமைப்பு கருதப்படுகின்றது. பாரம்பரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்றல்லாமல் வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்களாக மாற்றம் பெற்றுள்ள தற்போதைய உலக ஒழுங்கில், அறிவாற்றல் மற்றும் உடலுழைப்பு என்பவற்றில் மரபு ரீதியாக உள்ள இராணுவ கட்டமைப்புக்கள், நவீன பூகோள மூலோபாய யதார்த்தங்களை புரிந்து, எதிர்காலத்தை நோக்காக கொண்டு மாற்றமடைய தயாராக இருந்தால் மட்டுமே அவர்களால் தற்போதைய சவால்களை எளிதாதாக வெற்றிகொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

'நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு வழிவகுக்கக் கூடிய நமது தேசிய பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்தும் நவீன அச்சுறுத்தல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்த அவர், நாடுகளின் தலைவர்கள், தாங்கள் பிற நாடுகளுடன் சிறந்த கூட்டுறவினை அமைத்துக் கொள்ளவே முயல்கின்றனர் எனவும் தெரிவித்தார். “கொழும்பு வான் ஆய்வரங்கு” போன்ற சர்வதேச மாநாடுகள், வலுவான கூட்டமைப்பினை உருவாக்குவதற்கான கருத்துக்களை பரிமாரிக்கொள்வதற்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்கும் ஒரு சிறந்த தளத்தை வழங்குவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்க முடியும் என அவர் கருத்து வெளியிட்டார்.

மனிதாபிமான நடவடிக்கையின் பிரசன்னத்தை நினைவுகூர்ந்த அவர், நாங்கள் உலகின் மிக சக்தி வாய்ந்த மற்றும் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனக்குறிப்பிட்டார். அக் காலப்பகுதியில், சதித்திட்டங்கள் மற்றும் கொரில்லா தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான அட்டூழியங்கள், மனிதக் கேடயங்கள், நகர்ப்புற பயங்கரவாத தாக்குதல்கள், தற்கொலை குண்டுவெடிப்புக்கள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள், கடல் வழி நடவடிக்கைகள், பிரச்சாரம் மற்றும் உளவியல் நடவடிக்கைகள் ஆகியன இலங்கையர்களின் நாளாந்த வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருந்தது எனவும் தெரிவித்தார்

இதன்போது இலங்கைப் படைகளின் விதிவிலக்கான மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட தன்மை மட்டுமே இறுதி வெற்றியை உறுதிப்படுத்தியது என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், பாதுகாப்பானது நாட்டின் அபிவிருத்தியுடன் பிணைந்துள்ளதாகவும் இலங்கையின் பூகோள அரசியல் முக்கியத்துவம், நமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகிய இரண்டும் எதிர்காலத்திற்கான கட்டாயக் காரணிகள் ஆகும் எனவும் குறிப்பிட்டார். சமாதானம், ஒற்றுமை மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவை எமது மிகப்பெரிய அபிலாஷைகளாகும். நல்லிணக்கம் மற்றும் புணரமைப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் தீவிர கவனத்திற்குள்ளாகி வருகின்றது எனினும் குடிமக்களின் மனதில் சமாதானத்தை ஏற்படுத்த தவறின் அவைகள் ஒரு தொலைதூர கனவாக மாறிவிடும். இந்த சூழலில், இலங்கை விமானப்படை, பிற சகோதர படைகளுடன் இணைந்து தேசிய அபிவிருத்தியில் ஒரு மகத்தான பங்களிப்பினை நல்கி வருகின்றது எனவும் தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியிலான ஒத்துழைப்பானது, அறிவுப் பகிர்வு, தொழில்நுட்ப பரிமாற்றம், தகவல் இணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலமாக எதிர்கால பாதுகாப்பு அமைப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. எந்த செயற்றிட்டம் ஒன்றிற்கும் அறிவு பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை ஒன்றிணைந்த செயல்பாட்டிற்கு ஒரு பொதுவான தளத்தை உருவாக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், முன்னாள் தளபதிகள், வெளிநாட்டு அதிதிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வருடாந்த “கொழும்பு வான் ஆய்வரங்கு” சிரேஷ்ட இராணுவ தலைமை மற்றும் நிபுணர்கள் ஆகியோர் தாற்போதைய மற்றும் வளர்ந்துவரும் உலகளாவிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆழமாகவும் அத்தகைய சவால்களை எதிர்கொள்வதில் வான் பலத்தின் பங்கு ஆகியன தொடர்பாக விவாதிப்பதற்கான களத்தினை அளிக்கிறது. இன்றைய மற்றும் எதிர்காலத்தின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக கூட்டு வான்வழி அதிகாரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான முறைகள் தொடர்பாக இராணுவ வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறைகலில் உள்ள துறைசார் நிபுணர்களை ஒன்று சேர்க்கும் மரமாகவும் தொழிற்படுகிறது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்