››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கு மாணவர்களுக்கு படைவீரர்களினால் பல்வேறு உதவிகள்


வடக்கு மாணவர்களுக்கு படைவீரர்களினால் பல்வேறு உதவிகள்

[2017/11/13]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 400ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு, புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமையன்று (நவம்பர், 11) இடம்பெற்றது.

அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர் குழுவினால் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கான நிதியுதவி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68வது பிரிவு தலைமையகத்தால் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரிவுரை மற்றும் உதவிக்குறிப்புக்கள் அடங்கிய கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் என்பன இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு என்பனவும் படையினரால் வழங்கப்பட்டது.

உள்ளூர் மாணவ சமூகத்தின் கல்வித் தரத்தினை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் 68 பிரிவுவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்களினால் இந்த சமூக நலத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற மற்றுமொரு திட்டம் கிளிநொச்சி படைவீரர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சி திவாம்பிட்டி அரசாங்க தமிழ் பாடசாலையில் 312 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (நவம்பர்,10) இடம்பெற்றது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சமூக நலத்திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா இன்சுரன்ஸ் நிதி அனுசரணை வழங்கியது. சுமார் ரூபா 3000,000.00 பெறுமதியான பாடசாலை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்