››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் கலந்துரையாடல்

[2017/11/17]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் 'இலங்கையில் மோதல்களுக்கு பின்னர் ஆயுதப்படைகளின் பங்கு” எனும் தொனிப்பொருளில் டோஹா - மோதல் மற்றும் மனிதாபிமான ஆய்வுகள் நிலைய தூதுக்குளுவினருடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றினை இன்று (நவம்பர், 17) நடத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சுல்தான் ஸுஹ்லிப் மாஜித் பரகாட் அவர்கள் தலைமையிலான மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் 14 நாடுகளை சேர்ந்த எம்எஸ்சி மாணவர்கள் உள்ளடங்கிய தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு. அசங்க அபயகுனசேகர அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரத்னாயக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பிரதம பணிப்பாளர் மற்றும் கேணல் இசடீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கேணல் இசடீன் அவர்கள் இங்கு விளக்கமளிக்கும் போது 'இலங்கையில் மோதல்களுக்கு பின்னர் ஆயுதப்படைகளின் பங்கு” தொடர்பாகவும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கட்டங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார். இலங்கையில் மோதல்களுக்கு பின்னரான அபிவிருத்தி (மீள்குடியேற்றம், புனரமைப்பு, புனர்வாழ்வு, ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம்) ஆகிய 5R முறைமை ஊடாக நிறைவேற்றி இலங்கை வெற்றிபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல், குழுவினர் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கிடையே தங்களது எண்ணங்களையும், நோக்கங்களையும் பகிர்ந்து கொண்டு சமரச பேச்சுவார்த்தைகளுடன் நிறைவுற்றது



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்