››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் நைனா தீவுப்பகுதியில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு

கடற்படையினரால் நைனா தீவுப்பகுதியில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு

[2017/11/20]

அண்மையில் (நவம்பர், 18) யாழ் கடற்படையினர் நைனா தீவுப்பகுதியில் கள மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் நாகதீப ரஜ மஹா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட குறித்த சிகிச்சை முகாமிற்கு புதிதாக குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் (சுமார் 350) கலந்துகொண்டு சிகிச்சையினை பெற்றுக்கொண்டனர்.

மேலும், இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், சிறுவர் சுகாதார பிரச்சினைகள், வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கடுமையான / நாட்பட்ட உடல்நல நோய்கள், அத்துடன் கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு ஆகியன தகுதி பெற்ற கடற்படை மருத்துவ குழுவினரினால் அவதானிக்கப்பட்ட பின்னர் .ஆரம்ப கட்ட சுகாதார சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இச்சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்துணவு விநியோகம் ஆகிவற்றுக்கான அனுசரணையினை இலங்கை திரிபோஷா நிறுவனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் என்பன வழங்கியுள்ளன.

இலங்கை கடற்படையினர், பொதுமக்களின் நலன் மற்றும் சமூக பொறுப்பு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இவ்வாறான பல சமூக நலன்புரி திட்டங்களை வழமையாக முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்