››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முல்லைத்தீவு மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்குகள

முல்லைத்தீவு மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்குகள்

[2017/11/21]

இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இலவச கல்வி கருத்தரங்கு இம்மாதம் (நவம்பர்) 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகதிய வார விடுமுறை நாட்களில் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வருடம் (2017) டிசம்பர் மாதம் க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள முல்லைத்தீவு மாணவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகம் இக்கல்வி கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கமைய, தேசிய கல்வி நிறுவனத்தின் தரம்வாய்ந்த விரிவுரையாளர்களைக் கொண்டு மாணவர்களின் கணித மற்றும் விஞ்ஞான அறிவினை மேம்படுத்தும் வகையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் முல்லைத்தீவு பகுதி பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 170க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் இப்பிரதேசத்தில் இவ்வாறானதொரு கருத்தரங்கு இடம்பெற்றதுடன், 15 பாடசாலைகளிலிருந்து சுமார் 700 ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்