››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சீன பாதுகாப்பு பல்கலைக்கழக பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

சீன பாதுகாப்பு பல்கலைக்கழக பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/11/22]

 

சீன பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.

மேஜர் ஜெனரல் ஷி ஷோங்வு அவர்கள் தலைமையிலான பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு, கல்வி சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தது.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஆர்எம்எஸ் சரத் குமார, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்