››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

[2017/12/12]

"தாய் பின் பே" எனும் வியட்நாம் சரக்கு கொள்கலன் கப்பலில் உபதைக்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் கடந்த ஞாயிறன்று (டிசம்பர், 10) உதவியளித்துள்ளனர். அபாய அழைப்பினை மேற்கொண்ட குறித்த கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகான P 464 அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு களங்கரை விளக்க வீட்டிலிருந்து சுமார் 8.5 கடல் மைல்கள் தொலைவில் உள்ள ஆழ்கடல் பிரதேசத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலுக்கு விரைந்த இலங்கை கடற்படை வீரர்கள் உபாதைகளுக்கு ஆளான குறித்த கப்பல் பணியாளரை தங்களது படகிற்கு மாற்றி அதிவிரைவாக கரைக்கு கொண்டுவந்தனர். கரைக்கு கொண்டுவரப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்