››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பார்வைக்குறைபாடுள்ள பூனேரியன் மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்

பார்வைக்குறைபாடுள்ள பூனேரியன் மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்

[2017/12/12]

அண்மையில் (டிசம்பர், 10) பூனேரியன் கிரஞ்சி அரச தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற கண் சிகிச்சையின் போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள சுமார் 400 பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வினை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் கொழும்பு கண் தான சங்கங்கத்தின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாடுசெய்திருந்தது. இதன்போது, கண் சிகிச்சை நிபுணர் வைத்தியர் அஜந்த அபேவர்தன மற்றும் அவரது வைத்திய குழுவினரினால் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்நிகழ்வில் 38 பேர் சுயமாக முன்வந்து தமது மரணத்தின் பின்னர் கொழும்பு கண் தான சங்கங்கத்திற்கு தமது கண்களை அன்பளிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில், கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையாக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இலங்கை கண் தான சங்கங்க தலைவர் திரு. ஈஎம்எச்பீ மொரகஸ்வெவ, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கை கண் தான சங்கங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்