››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமக்கள் பாவனைக்காக வீதி திறந்துவைப்பு

பொதுமக்கள் பாவனைக்காக வீதி திறந்துவைப்பு

[2018/01/03]

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினூடாக செல்லும் வற்றாப்பளை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றை இணைக்கும் வீதி பொதுமக்கள் பாவனைக்காக கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உதயமாகியுள்ள புதுவருடத்தில் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நகர்வுகளில் ஒன்றாக இவ்வீதி ததிறந்து வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இவ்விரு பிரதேசங்களுக்கிடையிலான பயண தூரம் மற்றும் நேரம் என்பன கணிசமான அளவு குறைவடையவுள்ளன.

இந் நல்லிணக்கத்தை நோக்கிய நகர்வு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் 133 ஏக்கர் காணி விடுவிப்பு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து இடம்பெற்றது. மேலும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக படைவீரர்கள் இவ்வீதியினை சுத்தம் செய்து காணி உரிமையாளர்கள் சௌகரியமாக பயணிக்க வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததுடன் அதே தினத்தில் பக்தர்கள் ஒன்றினைந்து முல்லைத்தீவு கொட்டடி பிள்ளையார் கோவிலில் பூஜை நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஒத்துழைப்பிணையும் வழங்கினர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்