››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழுவினர் யாழ் கட்டளைத் தளபதியுடனான சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழுவினர் யாழ் கட்டளைத் தளபதியுடனான சந்திப்பு

[2018/01/09]

அண்மையில் (ஜனவரி, 06) வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவினர் யாழ் தலைமையக பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின்போது, ஐக்கிய இராச்சிய தூதுக்குழுவினரின் இலங்கைக்கான தலைவர் கௌரவ, ரணில் ஜயவர்தன அவர்கள் மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கிலான நல்லிணக்க செயற்பாடுகள், ஒருங்கிணைப்பு செயற்திட்டங்கள் போன்ற பலவிடயங்கள் தொடர்பாக யாழ். தலைமையக பாதுகாப்புப் படைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான செயற்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்