பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல்
பணிக்கான இறுதி இராணுவ குழு மாலி பயணம்
[2018/01/12]

மாலியில் நிலைகொண்டுள்ள ஐ.
நா. அமைதிகாக்கும் படையின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக
இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் இலங்கையிலிருந்து செவ்வாயன்று (ஜனவரி,
10) மாலிக்கு பயணமானார்கள். மாலிக்கு பயணமாகியுள்ள இலங்கை இராணுவத்தின் 32
வீரர்களுடன் சேர்த்து இதுவரை குறித்த பலபரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல்
பணிக்காக மொத்தம் 200 வீரர்களைக் கொண்ட வலுவான அணி மாலியில் அமைதிகாக்கும்
பணிகளுக்காக சென்றுள்ளனர்.
இதேவேளை, மாலி நாட்டின்
ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை
இராணுவத்தின் முதற்குழுவில் சுமார் 150 இராணுவ வீரர்கள் கடந்த வருடம்
(2017) டிசம்பர் மாதம் 24ஆம் திகதியும் 18 வீரர்கள் அடங்கிய மற்றுமொரு
குழுவினர் ஜனவரி மாதம் 09ம் திகதியும் மாலிக்கு பயணமாகியிருந்தனர். மேலும்
இலங்கை இராணுவத்தின் 10 படை பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார்
200 இராணுவ வீரர்கள் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஒருவருட காலம்
சேவையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |