››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நேபாள இராணுவ பிரதானி இலங்கை வருகை

நேபாள இராணுவ பிரதானி இலங்கை வருகை

[2018/01/18]

நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி (ஜனவரி, 18) இன்று காலை இலங்கைக்கு வருகை தந்தார். இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளுக்கமைய நேபாள இராணுவ பிரதானி இந் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

1960 ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி அன்று பிறந்த ஜெனரல் ராஜேந்திர சேத்ரி, 1978 ஆம் ஆண்டு, ரோயல் நேபாள இராணுவ இராணுவ அகாடமி, கரிபதி ராஜ்தால் (பீரங்கி) படையணியில் அதிகாரிகாரம் அளிக்கப்பட அதிகாரியாவார். மேலும் அவர் நேட்டோவின் எதிர்ப்பு எழுச்சி மற்றும் வன போர்யுக்தி பயிற்சி, கனிஷ்ட தலைமைத்துவம், படையணி தளபதி மற்றும் படையணி கட்டளையிடல் பாடநெறிகளை பயின்றார். இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து பீரங்கி மற்றும் வான் பாதுகாப்பு பீரங்கிப் பயிற்சிகள், கட்டளை மற்றும் பொது நிர்வாக கல்லூரி பட்டம் பெற்றுக்கொண்ட அவர், லெவென்வொர்த், கன்சாஸ், யுஎஸ்ஏ (1992) மற்றும் அமெரிக்க இராணுவப் போர் கல்லூரி, கார்லிஸ், பென்சில்வேனியா (2010) ஆகியவற்றில் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டார். ஜெனரல் சேத்ரி டிரிபுவன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். நேபாளம் மற்றும் அமெரிக்க இராணுவப் போர் கல்லூரி,

கார்லெய்ல், பென்சில்வேனியா ஆகியோரின் மூலோபாய ஆய்வுகளில் முதுநிலை பட்டப்படிப்புகளை பெற்றுள்ளார். மேலும் ஜெனரல் சேத்ரி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி இராணுவ பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

சில நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ள நேபாள இராணுவ பிரதானி, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை கடந்த 15ம் திகதி மூன்று நாட்கள் நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்ட பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா அவர்கள் நேற்றய தினம் நாட்டை விட்டு புறப்பட்டுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்