››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தேசிய தொழிற்பயிற்சி தகைமையை பூர்த்தி செய்தனர்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தேசிய தொழிற்பயிற்சி தகைமையை பூர்த்தி செய்தனர்

[2018/01/20]

சுமார் 170ற்கும் மேற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் அடங்கிய குழு ஒன்று தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு சேவைக் கல்லூரி அரங்கில் கடந்த வெள்ளிக் கிழமை (ஜனவரி,19) இடம் பெற்றது.

குறித்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

தொழில் பயிற்சி அதிகாரசபையின் அனுசரணையுடன் வத்தளை ஹெட்டிக்க ரணவிரு ஆய்வு மையத்தில் இடம்பெற்ற பயிற்சி நெறியில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான வீட்டு உபகரணங்கள் பழுதுபார்ப்பு, கட்டிட தச்சுவேலை, மின் கம்பியிடல், நீர் குழாயிடல், கணணி வன்பொருள், கணணி செயற்படுத்தல், அலுமினிய ஒட்டுமுறை ,சிகை அலங்காரம் மற்றும் அழகுக் கலை, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டிகள் பழுதுபார்த்தல் , மற்றும் தொலைபேசி பழுதுபார்த்தல் உள்ளிட்ட பயிற்சிநெறிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் ரணவிரு ஆய்வு மையத்தில் (RRC) 388ற்கும் மேற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தமது பயிற்சிகளை நிறைவு செய்து சான்றிதழ்களைப் பெற்றுள்ள அதேவளை 261மேற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தேசிய தொழிற்பயிற்சி தகைமை மட்டம் 2 ,3 மற்றும் 4 யினை பயின்றும் வருகின்றனர்.

மேலும் ரணவிரு ஆய்வு மையமானது (RRC) இதுவரை சுமார் 1174 அங்கவீனமுற்ற படையினருக்ககான தொழில் பயிற்சிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்