››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சிங்கப்பூர் பிரதமருக்கு இலங்கை இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை

சிங்கப்பூர் பிரதமருக்கு இலங்கை இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை

[2018/01/23]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பினை ஏற்று இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்க் அவர்களுக்கு இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜனவரி,23) இடம்பெற்ற சபிரதாய பூர்வ நிகழ்வின் போது படையினரால் இவ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

குறித்த இவ் அணிவகுப்பு மரியாதையில் இலங்கை இராணுவ பீரங்கி படைப்பிரிவின் இரு அதிகாரிகள் மற்றும் 72 இராணுவ சிப்பாய்கள் பங்குபற்றியதுடன் அணிவகுப்பு மரியாதை ஒரு பகுதியாக ஏ_19 ரக ஆயுத கௌரவமும் அளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிகழ்வில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்க் அவர்கள் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்