››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் மாதாந்த விழிப்புணர்வு கலந்துரையாடல்

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் மாதாந்த விழிப்புணர்வு கலந்துரையாடல்

[2018/01/24]

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் “சவால்களை சந்தித்தலும் இலங்கையில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துதலும் ” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு கலந்துரயாடல் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை (ஜனவரி,23) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், பல்வேறு காரணங்களினால் உணவு பயிரீடு, உற்பத்தி, விநியோகம், போக்குவரத்து மற்றும் நுகர்வு ஆகியவற்றில் காணப்படும் தற்போதைய சவால்களை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் ஆராயப்பட்டன. உணவு பயிரீட்டில் உள்ள பல்வேறு பங்குதாரர்களின் உள்ளீடு மற்றும் கொள்கை ரீதியாக உற்பத்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வேலைகள் ஆகியவற்றின் உள்ளீடுகளுடன் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிலையான வழிமுறைகளை முன்வைப்பதற்கான கலந்துரையாடலை ஏற்பாடு செய்யும் நோக்கில் இந் நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆர்.எம்.எஸ். சரத் குமார, விவசாய அமைச்சின் செயலாளர் திரு. பி. விஜயரத்ன, இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் ஆய்வுப் பணிப்பாளர் கலாநிதி. சூலணி அத்தநாயக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்