››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

[2018/01/29]

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த உள்ளூர் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை (ஜனவரி, 27) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இம்மாதம் 24ஆம் திகதி குருனாகர் மீன்பிடித்துறை முகத்திலிருந்து . “திலீக” எனும் மீன்பிடிப்படகின் மூலம் மீன்பிடிக்க சென்றவர்கள் நைனா தீவுப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொடிருந்த வேளையில் தமது மீன்பிடி படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடக்கு கடற் பிரதேசத்தில் இவ்வாறு நிர்க்கதியான நிலையில் இருந்த மேற்படி மீனவர்களை வடக்கு கடற்படை கட்டளையக தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளின் ஈடுபடும் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் விரைந்து செயற்பட்டு கடற்படை கப்பல் எஸ்எல்என்எஸ் விக்ரம II உதவியுடன் மீனவர்களும் அவர்களின் இரு படகுகளும் நெடுந்தீவுக்கு பாதுகாப்பாக எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்