››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நீர்பாசன குளத்தின் மீள் திருத்தப் பணிகளில் படையினர் பங்களிப்பு

நீர்பாசன குளத்தின் மீள் திருத்தப் பணிகளில் படையினர் பங்களிப்பு

[2018/02/02]

சிவில் பாதுகாப்பு படை மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மின்னேரிய பிராந்தியத்தின் முக்கிய நீர்பாசன குளத்தினை சுத்தீகரித்ததுடன் அதன் மீள் நிர்மானப் பணிகளையும் முன்னெடுத்தனர். 'பிபிதெமு பொலன்னறுவை' எனும் திட்டத்திற்கு அமைவாக ஹிங்குரக்கொடை சந்தன பொக்குன குளத்தினை சுத்தீகரித்து மீள் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமையன்று (ஜனவரி, 31) இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நீர்பாசன குளத்தினை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இக்குளத்தின் மூலம் பெருமளவிலான விவசாய நிலங்கள் மற்றும் 325க்கு மேற்பட்ட குடும்பகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்படுகின்றது. 42 ஏக்கர் பரப்பினை கொண்ட இக்குளம் புராதன வரலாற்று பின்னணியை கொண்டதாகும். கடந்த இரு தசாப்தங்களாக எதுவித புணரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் நீர் தாவரங்கள் நீர்பரப்பில் படர்ந்து காணப்பட்டதால் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 200ற்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தில் பங்கெடுத்தனர். இதன்மூலம் குளத்தின் நீரேந்து பரப்பு அதிகரிப்பதுடன் அதிகளவிலான விவசாய நிலங்களுக்கு நீரினை விநியோகிக்ககூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்