››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ குழு தயார் நிலையில்

லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ குழு தயார் நிலையில்

[2018/02/08]

ஐ.நா. அமைதிகாக்கும் படை சார்பாக லெபனான் நாட்டில் 12வது பாதுகாப்பு அணியில் இடைக்கால பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள படைவீரர்கள், அம்பேபுஸ்ஸ, சிங்க படையணி தலைமையகத்தில் தமது பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறும் நிகழ்வு நேற்றைய தினம் (பெப்ரவரி, 07) இடம்பெற்றது.

12வது பாதுகாப்பு அணியில் இலங்கை சார்பாக இலங்கை இராணுவத்தின் பல படைப்பிரிவுககளை பிரதிநிதித்துவப்படுத்தி 10 இராணுவ அதிகாரிகள் மற்றும் 140 இராணுவ சிப்பாய்கள் இடைக்கால பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 07 இராணுவ அதிகாரிகள் மற்றும் 43 இராணுவ சிப்பாய்கள் ஆகியோரை உள்ளடக்கிய முதற்தொகுதி வீரர்கள் இம்மாதம் மூன்றாம் வாரம் அளவில் லெபனான் நோக்கி பயணிக்கவுள்ளனர். லெப்டினன்ட் கேர்ணல் ஆர்.டப்.கே. ஹேவகே அவர்களின் கட்டளையின் கீழ் செயற்படும் ஏனைய குழுவினர் இம்மாதம் 18 மற்றும் 19ம் திகளிலும் எதிர்வரும் மார்ச் மாதம் 06ம் திகதியிலும் லெபனான் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

லெபனான் நாட்டின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள இலங்கை இராணுவ குழுவினர் நக்குவாரா பிரதேச பாதுகாப்பு மற்றும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு ஆகிய பணிகளில் நக்குவாரா படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் செயற்படவுள்ளனர்.

2010ம் ஆண்டிலிருந்து லெபனான் நாட்டின் பாதுகாப்பு பணிகளில் ஈடுவதற்காக இதுவரை 11 இராணுவ குழுவினர் லெபனான் நோக்கி பயணமாகியுள்ளனர். இதன் முதற் குழுவினர் 2010ம் ஆண்டு புறப்பட்டு சென்றனர்.

இதேவேளை, மாலி நாட்டில் ஐ. நா. பாதுகாப்பு பணிகளில் ஈடுவதற்காக சுமார் 200 பேரைக் கொண்ட வலுவான ஒரு இராணுவ அணி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாலி நோக்கி பயணமானதும் குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்