››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இரு பங்களாதேஷ் கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை

இரு பங்களாதேஷ் கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை

[2018/02/09]

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான பிஎன்எஸ் 'அல் ஹைதர்' மற்றும் 'நிர்முள்' ஆகிய கப்பல்கள் இன்றையதினம் (பெப்ரவரி, 09) தாயகம் திரும்பவுள்ளன. மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கடந்த புதனன்று (பெப்ரவரி, 07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல்களுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.

200 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ள 'அல் ஹைதர்' கப்பலானது 103.22 மீட்டர் நீளம் மற்றும் 10.83 மீட்டர் அகலத்தைக் கொண்டது. மற்றுமொரு கப்பலான 'நிர்முள்', 64.2 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலத்தைக் கொண்டது. மேலும் இக்கப்பலில் 70 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளும் காணப்படுகின்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்