››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிழக்கு துறைமுக நகரில் "ட்றின்கோ டயலொக்” மாநாடு

கிழக்கு துறைமுக நகரில் "ட்றின்கோ டயலொக்” மாநாடு

[2018/02/10]

அண்மையில் (பெப்ரவரி, 06) 7ஆவது "ட்றின்கோ டயலொக்” எனும் தொனிப்பொருளிலான கடல்சார் மாநாடு திருகோணமலையிலுள்ள கடற்படை நிலையத்தில் நடைபெற்றது. ஜூனியர் கடற்படை பணியாளர் கல்லூரியினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் இம்மாநாடு, மாணவ அதிகாரிகள் கடல்சார் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், அவை தொடர்பாக மேலும் தமது அறிவினை மேம்படுத்துவதற்குமான ஒரு சிறந்த தளமாக இம்மாநாடு அமைந்துள்ளது.

ஜூனியர் கடற்படை பணியாளர் கல்லூரியின் பாடநெறி 21இற்கான கல்லூரி மாணவ அதிகாரிகளினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது இவ்வருட மாநாடு "திருகோணமலை துறைமுகம்: 2025ஆம் ஆண்டுக்கான கடற்படையின் கடல்சார் வியூகத்தை இட்டுச்செல்லக்கூடிய சாத்தியமான நுழைவாயில்". எனும் தொனிப்பொருளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது.

மேலும் இந்நிகழ்வில், தேசிய கல்வி ஆணைக்குழுவின் பேராசிரியர் டப்ளியூ ஐ.சிரிவீரா மற்றும் திருகோணமலை துறைமுக பிரதிப் பணிப்பாளர் திரு.ஏ.எம்.எஸ்.எப் அறம்பத் ஆகியோர் விஷேட பேச்சாளர்களாக கலந்துகொண்டதுடன், ஜூனியர் கடற்படை பணியாளர் பாடநெறி 21 இற்கான கல்லூரி மாணவ அதிகாரிகள் ஐவரினால் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகளும் முன்வைக்கப்பட்டது.

இம்மாநாட்டில், கடற்படை கப்பல் கட்டளைகளின் கொடி அதிகாரி, ரியர் எட்மிரல் கபில சமரவீர அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறபித்துள்ளதுடன், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், ஜூனியர் கடற்படை பணியாளர் கல்லூரியை வழிநடத்தும் உறுப்பினர்கள், சீனக்குடா ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் இலங்கை விமானப்படை மற்றும் பயிற்சி உத்தியோகத்தர்கள் மாணவர் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்