கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு
[2018/02/14]

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 57ஆவது
படைப்பிரிவினர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அப்பிரதேசத்தை சேர்ந்த வரியா
மாணவர்கள் குழுவினர் சிலருக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள்
வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு அண்மையில் விஸ்வமடு மத்திய கல்லூரியில் (பெப்ரவரி,
11) இடம்பெற்றுள்ளது.
இதன்பிரகாரம், குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின்
150 பிள்ளைகள் பயன்பெற்றுக்கொண்டதாகவும், இதற்கான நன்கொடையினை திரு.
கிரிஷ்ணசாமி கனகராஜா மற்றும் திரு. துஷ்யந்த ஆகியோர் வழங்கியுள்ளதாகவும்
இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வின்போது, பாடசாலை மாணவர்களின்
நலன் கருதி சுத்தமான குடிநீரை வழங்கும வகையில் நிறுவப்பட்ட சுத்திகரிப்பு
நிலையமும் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான நிதி அனுசரணையினை திரு.வீ .மனோகர்,
வைத்தியர் சிவா கோநேஷன் மற்றும் திரு. கே. ரத்யா ஆகியோர் வழங்கியுள்ளனர்.
இதேவேளை, வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழுள்ள 21ஆவது
படைப்பிரிவினர் வவுனியா வீ மகமைலன்குலம் கனிஷ்ட பாடசாலைக்கு இசைக்கருவிகளை
அண்மையில் (பெப்ரவரி, 08) அன்பளிப்பு செய்துள்ளதுடன், இதற்கான நிதி
அன்பளிப்பினை நலன்விரும்பிகள் சிலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது |