››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2018/02/18]

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (பெப்ரவரி, 18) கலந்து சிறப்பித்துள்ளார். சுமார் 2 கி மீ தூரம் கொண்ட குறித்த ஓட்ட நிகழ்வு காலிமுகத்திடலில் ஆரம்பமாகி கொழும்பு -2 மலே வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நிறைவுற்றது.

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு முப்படை தளபதிகள் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இவ்வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வவில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், 134 அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நட்பு மற்றும் தோழமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வருடாந்தம் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடுசெகின்றமை குறிப்பிடத்தக்கது.

“விளையாட்னூடாக நட்பு” எனும் குறிக்கோளுக்கு அமைவாக ஆயுத்தப்படையினரை விளையாட்டினூடாக உலக சமாதானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுவதே இக்கழகத்தின் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை, உலகின் மிகப்பெரிய ஒரு பல்துறை அமைப்புகளில் ஒன்றாக சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்