››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்

ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்

[2018/02/18]

அண்மையில் (பெப்ரவரி, 16) ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான “ஐஆர்ஐஎஸ் “பயண்டொர்”,” நக்டி” மற்றும் ரொன்ப் ஆகிய மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள குறித்த இக்கப்பல்களை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிகின்றன.

மேலும் குறித்த கப்பல்கள் எதிர்வரும் 19ம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து புறப்படமுன்னர், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருக்கும் விளையாட்டு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்