››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

லெபனானின் ஐக்கிய நாடுகள் சமாதான பணிகளுக்காக முதற்குழுவினர் பயணம்

லெபனானின் ஐக்கிய நாடுகள் சமாதான பணிகளுக்காக முதற்குழுவினர் பயணம்

[2018/02/19]

இலங்கை இராணுவத்தின் 12ஆவது பாதுகாப்பு படையினரின் முதற்குழுவினர் ஐக்கிய நாடுகள் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக நேற்று (பெப்ரவரி, 18) லெபனானுக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.

குறித்த பணிகளுக்காக முதற்குழுவில், இரு அதிகாரிகள் மற்றும் பதினான்கு வீரர்கள் சென்றுள்ளதுடன், 13 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மற்றும் 140 வீரர்கள் உள்ளிட்ட இலங்கையின் பலமிக்க இராணுவ வீரர்கள் 150 பேர் ஒரு வருடகாலம் சேவையாற்ற உள்ளதாக இரானுவத்தகவல்கள் தெரிவிகின்றன.

இப்பாதுகாப்பு படையினர் நாக்குஒரா வில் உள்ள படைத் தலைமையகத்தின் பாதுகாப்பு மற்றும் விஐபி கடமைகளுக்கு பொறுப்பாகவும் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்கான தலைமையகத்தின் அனைத்து நுழைவு வழிகளையும் கட்டுப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளிலும் ஈடுபடுவர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சமாதான பணிகளுக்காக லெபனானினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரம் 2010 ஆம் ஆண்டிலிருந்து அங்கு சேவையாற்றுவதற்காக 11 இராணுவ குழுக்களை இலங்கை இராணுவம் அனுப்பியுள்ளது.

இதன் இரண்டாவது குழுவினர் பெப்ரவரி 19ஆம் திகதியும், ஏனையோர் 2018 மார்ச் 06ஆம் திகதியும் லெபனான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐக்கிய நாடுகள் சமாதான பணிகளில் இணைந்துகொள்ளும் வகையில் 34 இராணுவ வீரர்கள் அடங்கிய இரண்டாவது குழுவினர் இன்று காலை (பெப்ரவரி 19ஆம் திகதி) புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், ஏனையோர் 2018 மார்ச் 06ஆம் திகதியும் லெபனான் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்