››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி

நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி

[2018/02/22]

இலங்கை கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவுக்கான இறங்கு துறை திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்தையடுத்து அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ( பெப்ரவரி,21) இடம்பெற்றது. இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்ததன் மூலம் மீன்பிடி படகுகள், பயணிகள் படகுகள் மற்றும் கடல் அம்பியுலன்ஸ் ஆகியன எளிதில் பயனிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

குறித்த இறங்குதுறை, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சின் நிதி உதவியின் மூலம் இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டது. இவ் இறங்குதுறை நிர்மாணப்பணிகளின் முதல் கட்டத்தின் கீழ் 101 அடி நீளமும், 31 அடி அகலமும் கொண்ட பகுதி அமைக்கப்பட்டன. இப்பகுதியினை கடந்த ஆண்டு மார்ச் மாதம் (2017) பொது மக்கள் பாவனைக்கென வழங்கி வைக்கப்பட்டது.

இவ் இறங்குதுறை, தீவுப் பகுதி மக்கள், பிரதான நிலப்பகுதிக்கு செல்வதற்கான இலகுவான போக்குவரத்திற்கும், வடக்கு தீபகற்பத்தின் பொருளாதார மறுசீரமைப்பிற்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. மேலும் இது இலங்கையின் கடற்படையின் நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்தி வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ற மற்றொரு சமூக நலன்புரி நோக்குடைய திட்டமாகவும் அமைகின்றது.

இவ்வைபவத்தில் இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் திரு. என். வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்