››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

 'அபேக்ஷா' மருத்துவமனையின் வார்டுகள் புணரமைப்பு

'அபேக்ஷா' மருத்துவமனையின் வார்டுகள் புணரமைப்பு

[2018/02/22]

மகரகமவில் உள்ள 'அபேஷா' மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட 3 மற்றும் 4 இலக்க வார்டுகள் அண்மையில் (பெப்ரவரி,20) மருத்துவமையில் இடம்பெற்ற வைபபத்தின் போது மருத்துவமனை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் இலேசாயுத படைப்பிரிவினரிடம் (SLLI) சுகாதார அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய படைப்பிரிவின் வீரர்களால் குறித்த வார்டுகளை புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முன்னர் புற்றுநோய் இன்ஸ்டியூட் என்று அறியப்பட்ட 'அபேக்ஷா மருத்துவமனையானது, புற்று நோயைக் கண்டறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சைகளை பின்தொடர்தல் என்பவற்றுக்காக நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஒரே ஒரு அரச மருத்துவமனையாகும். இங்கு அனைத்து சேவைகளும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் இம் மருத்துவமனை, மருத்துவ பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள், அதே போல் புற்றுநோயியல் சார்ந்த பிற சிறப்புத் துறைகளுக்கும் ஒரு பெரிய பயிற்சி மையமாகவும் அமைகின்றது.

மேலும், இம் மருத்துவமனையில் 4 குழந்தைகள் வார்டுகள் உட்பட 22 வார்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு வார்டுகளை புதுப்பிப்பதற்கான பணியை இராணுவத்தினர் தமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி நிறைவு செய்தனர். குறித்த பணியினை அவர்கள் சுயமாக முன்வந்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, "நீரிழிவு நோயினை தோற்கடிப்போம்' எனும் தொனிப்பொருளில் 306 லயன்ஸ் கிளப் மற்றும் இலங்கை நீரிழிவு கூட்டமைப்பு ஆகியவற்றினால் தொற்றா நோய்கள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக திருகோணமலையில் ஏற்பாடுசெய்யப்பட்ட நடை பவனி நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் மகளிர் படை வீராங்கனைகள் உட்பட சுமார் 60 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்