››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சிதீவு உற்சவம்

கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம்

[2018/02/25]

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் சனிக்கிழமையன்று (பெப்ரவரி,24) நடைபெற்றது.

யுத்த காலப்பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட கச்சதீவு அந்தோனியார் ஆலயம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடற்படையினரால் எல்லைப்புற கத்தோலிக்க பக்தர்களின் நலன் கருதி சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இவ் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதற்கமைய இம்முறை ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் இலங்கை கத்தோலிக்க பக்தர்கள் இங்கு இடம்பெற்ற சமய ஆராதனை நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

வரலாற்றில் முதன்முறையாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆராதனைகள் இடம்பெற்றன. இம்முறை நடைபெற்ற புனித அந்தோனியார் திருவிழாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இம்முறை இடம்பெற்ற திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கான போக்குவரத்து, உணவு, குடிநீர் மற்றும் வைத்திய வசதிகள் என்பனவற்றை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டனர்.

இவ் ஆராதனை நிகழ்வில் சிறுவர் விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்