››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

[2018/02/25]

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்ததாக, இலங்கை கடற்படையானது, நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சுமார் 100,000 சதுப்புநில தாவரங்களை நடுகை செய்துள்ளது. கடற்படையின் கடல்சார் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களின் கீழ் நாடுமுழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடல் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்கள் மற்றும் கடல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலகுகளுக்கு என இலங்கை கடற்படையினரால் பிரத்தியேகமாக குழு ஏற்படுத்தப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவை கண்காணிக்கப்படுகின்றன. கடற்படையின் அனைத்து கட்டளையாகங்களும் அரச மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் உதவியுடன் கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இலங்கை கடற்படையானது, கடந்த இரு ஆண்டுகளில் கடல் சூழலியல், சிறிய மீனவ கூட்டமைப்பு மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த 100,000 கண்டல் தாவரங்களை நடுகை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்