››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' சைக்கிலோட்டப்போட்டி அடுத்த வாரம்

'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' சைக்கிலோட்டப்போட்டி அடுத்த வாரம்

[2018/02/23]

இலங்கை விமானப்படை தனது 67வது ஆண்டு நிறைவு தினத்தை மார்ச் மாதம் 2ஆம் திகதி கொண்டாடவுள்ளது. அக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படை, வருடாந்த சைக்கிள் ஓட்டத்தை 'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' என்ற தொடரில் 19 வது தொடர்ச்சியான ஆண்டாக, இலங்கையின் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்புடன் இணைந்து நடாத்துகின்றது.

'குவன் ஹமுதா பாபெதி சவாரிய ' சைக்கிள் ஓட்டபோட்டி நாட்டில் நடைபெறும் முக்கிய வருடாந்த சைக்கிள் ஓட்டப்பந்தயங்களில் ஒன்றாகும். மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள போட்டியில் தேசிய தரவரிசையில் அதிகூடிய புள்ளிகளுடன் இருக்கும் வீரர்கள் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர். இவ் ஆண்டுக்கான சைக்கிளோட்டப்போட்டி மார்ச் மாதம் 02ம் திகதி அன்று ஆரம்பமாகவுள்ளது.

போட்டிகள் கொழும்பில் உள்ள விமானப்படைத் தலைமையகத்தில் இருந்து ஆரம்பித்து புத்தளம், ஹிங்குராக்கொட, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு வரையிலான 447.4 கி.மீ. போட்டித்தூரத்தை போட்டியாளர்கள் கடந்துசெள்ளவுள்ளனர். இதேவேளை, மார்ச் மாதம் 04 ஆம் திகதி பெண்கள் பிரிவுக்கான சைக்கிளோட்டப்போட்டி மட்டக்களப்பில் இருந்து அம்பாறை வரை இடம்பெறவுள்ளது.

விமானப்படையின் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு மார்ச் மாதம் 03ம் திகதி தொடக்கம் 05ம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் விமான விமான சாகசங்கள் மற்றும் பாராசூட் காட்சிகள், கலாச்சார, அணிவகுப்பு பயிற்சி, இசைக்குழு காட்சிகள் மற்றும் சிறப்பு படைகள் காட்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. குறித்த தினங்களில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணியளவில் இடம்பெறவுள்ள காட்சிகளை பொதுமக்கள் இலவசாமாக கண்டுகளிக்க முடியும்.

மேற்படி நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இலங்கை விமானப்படை தலைமையகத்தில் வியாழக்கிழமை( பெப்ரவரி,22 ) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள், இலங்கையின் சைக்கிள் ஓட்டுதல் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்