››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முல்லைத்தீவு இளைஞர்களுக்கு இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகள்

முல்லைத்தீவு இளைஞர்களுக்கு இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகள்

[2018/02/26]

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்ப்பாடு செய்திருந்த முல்லைத்தீவு பிரதேச சிவில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வினை முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 68ஆவது பிரிவினர் ஏற்பாடுசெய்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி, 25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரானபாலை, புனித அந்தோனியார் விளையாட்டு கழகம், மற்றும் உடுப்புக்குளம் அலை ஓசை விளையாட்டு கழகம், கலந்துகொண்டு கடும் போட்டிகளுக்கு மத்தியில் (1-0) ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் புனித அந்தோனியார் விளையாட்டு கழகம், பாதுகாப்பு படை வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டது.

இருபது (20) பிராந்திய அணிகள் போட்டியில் பங்கேற்றன. ஆரம்ப சுற்றுகள் 03 முதல் 12 ஆம் திகதி வரை நடத்தப்பட்டன. வெற்றியீட்டிய அணிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் விளையாட்டு காலணி என்பன வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்கு பெற்ற அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு கால்பந்து வீதம் வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இப்பகுதியில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்