››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடலோர பாதுகாப்பு படை உயிர்காப்பு பிரிவினரால் 900ற்கு மேற்பட்டோர்களின் உயிர்கள் காப்பு

கடலோர பாதுகாப்பு படை உயிர்காப்பு பிரிவினரால் 900ற்கு மேற்பட்டோர்களின் உயிர்கள் காப்பு

[2018/03/14]

அண்மையில் (மார்ச்.12) கடலில் மூழ்கி தத்தளித்த இருவரை தெற்கு கரையோர நகரமான கல்கிஸ்ஸை கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பிரபல்யமான கல்கிஸ்ஸை கடற்கரையோரத்தில் குளித்துக்கொண்டிருந்த வெயாங்கொட மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் கடல் அலையினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் குறித்த இரு இளைஞர்களையும் காப்பாற்றியுள்ளனர்.

அண்மையில் தனது எட்டாவது வருடப்பூர்த்தியை கொண்டாடிய இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படை நாடுமுழுவதிலும் உள்ள பிரபல்யமான கடற்கரையோரங்களில் உயிர்காப்பு பிரிவுகளை நிறுவியுள்ளது. இப்பணிகளில் கடலோர பாதுகாப்பு படையின் நிபுணத்துவம் வாந்த உயிர்காப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை இவர்களினால் 980ற்கு மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இவ் உயிர்காப்பாளர்களுக்கு பலபிட்டிய கடலோர பாதுகாப்பு படை தளத்தில் அமைந்துள்ள் பயிற்சி மையத்தில் விஷேட நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்களினால் பயிற்சியளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்