››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படை கப்பலுக்கு புதிய இரண்டு இயந்திரங்கள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்க்கிவைப்பு

கடற்படை கப்பலுக்கு புதிய இரண்டு இயந்திரங்கள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கிவைப்பு

[2018/03/15]

இலங்கை கடற்படை கப்பலுக்கான புதிய இரண்டு இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது.

இப்புதிய இயந்திரங்கள் இரண்டையும் கடற்படை அதிகாரிகளின் பிரதிப் பிரதானி மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர், ரியர் எட்மிரல் பியால் டீ சில்வா அவர்களிடம், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு ப்ரைசீ ஹட்சசன் அவர்கள் காலியிலுள்ள தக்க்ஷின கடற்படை கப்பல் தளத்தில் நேற்று (மார்ச் .15) இடம்பெற்ற வைபவத்தின்போது கையளிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இயந்திரங்களை கடற்படை கப்பல் 'மிஹிகாதா” விற்கு பொருத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட தென்பிராந்திய கடற்படைத் தளபதி, ரியர் எட்மிரல் கபில சமரவீரா மற்றும் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்