››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் சமூக நலன்புரி நிகழ்வுகள் பல முன்னெடுப்பு

இராணுவத்தினரால் சமூக நலன்புரி நிகழ்வுகள் பல முன்னெடுப்பு

[2018/03/19]

இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவு பிராந்தியத்தில் கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்வதற்கான மற்றுமொரு சமூக நலன்புரி திட்டத்தை வார இறுதிநாட்களில் முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 59 ஆம் பிரிவின் 593 படைப்பிரிவினர் கடற்கரையினை சுத்தம் செய்யும் சிரமாதனப்பணிகளை சனிக்கிழமை (மார்ச் 17) முன்னெடுத்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன

இதன்போது, முல்லைத்தீவு நாயுருவிலிருந்து செம்மலை வரைக்கும் சுமார் 8 கி.மீ. கரையோரமாக பொதுமக்களுடன் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளனர். இங்கு காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட கடற்கரையிலுள்ள அனைத்து குப்பைகளையும் அவர்கள் அகற்றியுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு -பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீலுள்ள 24ஆம் பிரிவின் 23 இலங்கை சிங்க ரெஜிமென்ட் மற்றும் 3 (தொண்டர்) விஜயபாகு காலாட்படைப்பிரிவுகள் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை – பெரியநிலாவெளி பகுதியில் கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பு செய்யும் வகையில் அம்பாறை அனர்த்த முகாமை நிலையத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமாநிக்கப்பட்ட குறித்த வீடுகளின் கூரைகள் காற்றினால் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

படையினரின் முன்மாதிறியான இவ்வுயர்ந்த செயற்பாட்டினை அரச அதிகாரிகள், வீட்டுரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் வரவேற்றுள்ளனர்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்