››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

[2018/03/22]

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் செவ்வாயன்று (மார்ச்,20) உதவியளித்துள்ளனர். மீன்பிடிக்காக சென்றிருந்த மீனவர் ஒருவரது கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு உடடியாக சிகிச்சை தேவைப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, பவுல் பொயின்ட் இருந்து சுமார் 225 கடல் மைல் தொலைவில் இம்மீன்பிடி படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகான எஸ்எல்என்எஸ் ரணசிரி மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்