››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

போர் வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

போர் வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

[2018/04/03]

தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல்,03) இடம்பெற்றது. கொழும்பு கடற்படை தலைமையகத்தின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குவைத்-இலங்கை ரணவிரு தூதரு புலமைப்பரிசில்கள் வழங்கல் -2018 வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வைபவ இடத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக்கா அவர்கள் வரவேற்றார்.

இந்நிகழ்வு குவைத்-இலங்கை மன்றத்துடன் இணைந்து ரணவிரு சேவா அதிகாரசபை ஏற்பாடு செய்தது. குவைத்தில் பணிபுரியும் இலங்கையார்களினால் நடத்தப்படும் குவைத்-இலங்கை சம்மேளனத்தினால் புலமைப்பரிசிளுக்கான நிதிக்கு சுமார் 720,000.00 ரூபா வழங்கப்பட்டது. போர் வீரர்களின் குடும்பத்திலிருந்து 60 பிள்ளைகளுக்கு தலா 12,000.00. ரூபா வீதம் கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. இது அவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதாந்த தவணைகளில் வைப்பிலிடப்படும். வைபவத்தின் போது ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ரூ. 2,000.00 முதல் இரண்டு மாதங்களுக்கான புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. மேலும் மதிப்புமிக்க மடிக்கணினிகளும் தகுதியுள்ள பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், இவ் வைபவத்தின்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற மாற்றுத்திரனாளிகளுக்கான கரப்பந்து சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கான வெற்றிக்கோப்பையினையும் வழங்கிவைத்தார்.

குவைத் - இலங்கை மன்றம், ரணவிரு சேவா அதிகாரசபையுடன் இணைந்து 2008 ஆம் ஆண்டு முதல் சமாதான யுகத்தை ஏற்படுத்துவதற்காக தன்னலமற்ற மற்றும் வீர சேவையை வழங்கிய போர் வீரர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் நிதியுதவியினை வழங்குகின்றது. இதுவரை 477 போர் வீரர்களின் பிள்ளைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகாரசபையின் அதிகாரிககள் மற்றும் குவைத் - இலங்கை மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்