››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆரம்பம்

10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆரம்பம்

[2018/04/04]

2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இம்மாதம் 3 ஆம் திகதி பனாகொட இராணுவ உள்ளரங்கு மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. முப்படைகளின் பாரிய விளையாட்டு நிகழ்வான 10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆனது, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களால் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவில் , பெட்மின்டன், வலைப் பந்தாட்டம், கிரிக்கட், கபடி, கராட்டி, படகோட்டம், ரக்பி, கால்பந்தாட்டம், நீச்சல், ஸ்கோச், மேசைப் பந்து, தண்ணீர் பந்து, பாரம் தூக்குதல், ஜிம்னாஸ்டிக், வுசு போன்ற போட்டிகள் இடம்பெறவுள்ளன. குறித்த இப் போட்டிகளில் முப்படையைச் சேர்ந்த சுமார் 1000ற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.

10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 இனை இலங்கை இராணுவத்தினர் பொறுப்பேற்று நடாத்துகின்றனர்.

இந்நிகழ்வில் இராணுவ விளையாட்டு சங்கத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடற்படை பதவி நிலை பிரதானி ரியர் அட்மிரல் நீல் ரொஷயிரோ, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்