››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சர்வதேச பாதுகாப்பு தொடர்பான 'VIIவது மொஸ்கோ மாநாட்டில்' பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

சர்வதேச பாதுகாப்பு தொடர்பான 'VIIவது மொஸ்கோ மாநாட்டில்' பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2018/04/08]

அண்மையில் மொஸ்கோ மாநகரில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு தொடர்பான VIIவது மாஸ்கோ மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் கலந்து கொண்டார். இம் மாநாடு ரஷ்ய தலைநகரில் ஏப்ரல் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் ரஷ்யன் ரோயல் ஹோட்டலில் நடைபெற்றது.

ஏழாவது முறையாக நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாட்டில் ஏறத்தாழ 850 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இப் பிரதிநிதிகளில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், இராணுவ தலைவர்கள், வல்லுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இந்த ஆண்டு பேச்சுவார்த்தைகள் "சிரியாவில் ISIS அழிவின் பின்னரான மத்திய கிழக்கு தொடர்பான கண்ணோட்டம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

ரஷியன் இராணுவ கூட்டமைப்பு நாயக பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷியுகு அவர்கள் இம்மாட்டினை திறந்து வைத்தார். சர்வதேச பாதுகாப்பு தொடர்பான மொஸ்கோ மாநாடு 2012ஆம் ஆண்டு முதல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நடைபெற்று வரும் ஒரு வருடாந்த நிகழ்வு ஆகும்.

இம்மாட்டில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் "ஆசியா: பிராந்திய பாதுகாப்பு அம்சங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், உலகளாவிய பாதுகாப்பு போக்குகளின் பின்னணியில், தெற்காசிய பிராந்தியத்துடன் கூடிய இந்தியப் பெருங்கடல் பகுதியின் மாறும் கடல்சார் பாதுகாப்பு நிலப்பகுதிக்கு முக்கியத்துவம் அளித்தலில் உள்ள சில முக்கிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக தமது கருத்துக்களை பரிமாறினார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்