››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேலும் பல வீடுகள்

யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேலும் பல வீடுகள்

[2018/04/06]

யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட முப்பது புதிய வீடுகள் வியாழக்கிழமையன்று (ஏப்ரல்,05) தெல்லிப்பளையில் இடம்பெற்ற நிகழ்வின் போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. யுத்தத்தின்போது யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிபுணத்துவம் என்பன யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்கள் படையணி வழங்கிய அதேவேளை, நிர்மாணப்பணிகளுக்கான கட்டிடப்பொருட்கள் மற்றும் நிதி ஆகியவற்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு வழங்கி வைத்தது.

மேலும், கடந்த வாரம், இது போன்ற வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 25 புதிய வீடுகள் நள்ளினக்கபுரம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்பட்டது. அத்துடன் கீரிமலை வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 100 புதிய வீடுகள் சில மாதங்களுக்கு முன்னர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சிரேஷ்ட அரச அதிகாரிகள், மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்